பிரபல மின்சார இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினவா இருவிதமான பயன்பாட்டு திறன் கொண்டுள்ள ட்யூவல் (Dual) எனும் மின்சார இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது.

இது ஓர் மொபட் வகை மின்சார ஸ்கூட்டராகும். டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டைப் போன்று இதன் ஸ்டைல் இருக்கின்றது. ரூ. 58,998 என்ற விலையே இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன பதிவு எண் இல்லாமலே இதில் பயணிக்கலாம்.