நெல்லை மாவட்டத்தில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பேட்டை அனவரதநல்லூர் சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பேட்டை பகுதியில் ஒரு பழ கடை வைத்து நடத்தி வந்தார்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாதங்களாக கடையில் எந்த வியாபாரமும் இல்லாத காரணத்தினால் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இந்த நிலையில் தான் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் போனதால் விரக்தி அடைந்த முனியாண்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இவர் தற்கொலை செய்து கொண்டதை தெரிந்து பேட்டை போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததோடு இதுதொடர்பில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.