தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்குகளில் அலைமோதி பார்த்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் ரூபாய் 200 கோடியை வசூல் செய்து உள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.

மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கின்றது. இந்தநிலையில் நேற்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வாத்தி கம்மிங் பாடல் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகைகளை குவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வாத்தி கம்மிங் பாடல் 24 மணி நேரத்தில் ஏழுமில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது. இதனால் தற்போது தென்னிந்திய அளவில் இந்தப் பாடல் 24 மணி நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.