டாடா நிறுவனம் இந்தியாவில் உள்ள ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் ரத்தன் டாடா ஆவார். கொரோனா வைரஸால் இந்தியாவே துவண்டு கொண்டிருந்த வேளையில் அதிகபட்ச தொகையை அரசாங்கத்திடம் நிவாரணமாக அளித்த வள்ளல் இவர். டாடா வின் நிறுவன தலைவர் ரத்தன் டாடா வழிநடத்தும் இந்த டா டா நிறுவனமானது கார்கள் போன்ற வாகனங்கள் முதல் உப்பு, காப்பீடு, தேயிலை என பல துறைகளில் பல சாதனைகளைச் செய்து வருகிறது.
![](https://agamtamil.com/wp-content/uploads/2021/01/tiago-3.jpg)
டாடாவின் ஒரு முக்கியமான நிறுவனம்தான் டாட்டா மோட்டார்ஸ். இந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான டியாகோவில் லிமிடெட் எடிசன் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இக்கார் அறிமுகமாக உள்ள நிலையில் இதற்கான புதிய டீசர் படத்தை நிறுவனம் வெளியிட்டு வரவேற்பைப் பெற்றது. டியாகோ டாடாவின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்று மட்டுமல்ல. இக்கார் நாட்டில் அதிகம் விற்பனையா
கும் கார்களில் ஒன்றும்கூட.