சென்னை கொடுங்கையூர் நாராயணசுவாமி கார்டன் முதல் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் இவருடைய மகள் ஹேமவர்ஷினி. வயது 23 இவர். சென்னை அடையாறில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். மாதவரம் நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிளில் பின்பக்கமாக மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹேமவர்ஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாதவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அருகிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தற்போது வலைவீசி காவல்துறையினர் தேடி வருகின்றனர்.