வங்கிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பது போல இந்தியாவில் பல வங்கிகள் உதயமாகி மக்கள் சேவை புரிந்து வருகின்றன. தற்போது இந்தியாவில் ஜனத்தொகையும் பெருகிவிட்டதால் மக்களின் தேவைக்கேற்ப சேவை செய்ய பல வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் ஒவ்வொரு சிறு சிறு வங்கிகளையும் மேலிடத்தில் இருந்து ஆட்சி செய்வது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எனக்கூறப்படும் மத்திய வங்கியே ஆகும்.

மத்திய வங்கி போக மற்றுமொரு பிரமாண்ட வங்கியை தோற்றுவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் துறைமுகம், சாலை மற்றும் மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகிய திட்டங்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக இயங்கும் வகையில் இந்த ஒரு வங்கியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அறிவிக்கப்படும் எனவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அந்த வங்கி துவங்கும்போது ஆயிரக்கணக்காணோருக்கு வேலை கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.