அயோத்தி வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. இதில் பாஜக ஆட்சியிலேயே தீர்ப்பு வந்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்புவர ‘ராமஜென்மபூமி அறக்கட்டளை’ என்னும் அமைப்பு இதுதொடர்பாக அண்மையில் அறிக்கை வெளியிட்டது. அதில் வீடு வீடாக போய் நிதி திரட்டப்படும், உள்நாட்டில் மக்கள் தரும் பணத்தில் இருந்தே கோயில் கட்டப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சிவசேனையின் அதிகாரப்பூர்வ கட்சிப்பத்திரிகையான சாம்னா இதுகுறித்து, ‘அரசியல் லாபத்துக்காக எந்த கோயிலும் கட்டக்கூடாது. இந்து மதப்பெயரை உலகறியச்செய்யும் வகையில் கோயில்கள் இருக்கவேண்டும். அயோத்தி ராமர் கோயில் கட்டப்படுவதை 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரமாக பாஜக பயன்படுத்தும். ராமரின் பெயரால் மக்களிடம் வீடு, வீடாகபோய் நிதிபிரிப்பது அவரை அவமானப்படுத்தும் செயல். இந்த அரசியல் நாடகம் நிறுத்தப்படவேண்டும்.’என எழுதியுள்ளது. இதுதொடர்பாக பாஜகவின் மூத்ததலைவர்களில் ஒருவரான ஆசிஷ் ஷேலார், ‘சிவசேனை ஏன் இதற்கு பயப்படுகிறது? 2024 தேர்தல் தோல்விக்கு இப்போதே தொடக்க உரை எழுதுகிறதோ? ராமர்கோயில் அனைத்து மக்களின் பங்களிப்போடு கட்டப்படவேண்டும்.’என்பது எங்கள் நோக்கம். என தெளிவுபடுத்தியுள்ளார்.