சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் அதிமுகவில் ஆங்காங்கே சலசலப்புகள் வெடித்த வண்ணமே இருக்கிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சசிகலா வரும் 3 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ் சார்ஜ் ஆகி தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா விடுதலை செய்தி வந்ததுமே முதல் தீப்பொறியை நெல்லை அதிமுகவில் சிலரே பற்ற வைத்தனர். உடனே தடாலடியாக அவர்களை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ்_ஈபிஎஸ் கூட்டாக அறிக்கைவிட்டனர். அதேநேரம் ஓபிஎஸின் மகனே சசிகலா விரைவில் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஒரு பதிவு போட்டிருந்தார். அப்போது முதலே அதிமுகவில் பலரும் சசிகலாவுக்கு ஆதரவு போஸ்டர் ஒட்டியே வருகின்றனர்.

இந்நிலையில் தேனிமாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் எங்களின் ராஜமாதவே என பாகுபலி ரம்யா கிருஷ்ணன் பாத்திரத்தோடு ஒப்பிட்டு போஸ்டர் அடித்துள்ளனர். இதேபோல் வீழ்வேனென்று நினைத்தாயோ….வல்லமை தாரோயோ என்றெல்லாம் புதுப்புது போஸ்டர்கள் பளிச்சிடுகிறது. இதைப் பார்த்த அதிமுகவினரே குழப்பத்தில் இருக்கின்றனர். அதிமுகவுக்குள் இன்னும் எத்தனை ஸ்லீப்பெர் செல்கள் இருக்கிறார்களோ?