தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவர் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் பிறகு இவருக்கு எக்கச்சக்கமாக படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக் குவிந்தது. இயக்குனர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் இணைந்து நடித்து உருவான திரைப்படம் தான் “பியார் பிரேமம் காதல்”. திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதுபோக ஹரிஷ் கல்யாண் உடைய திரை உலக வாழ்க்கைக்கும் திருப்பு முனையாக அமைந்தது. “பியார் பிரேமம் காதல்” திரைப்படத்தை அடுத்து தாராள பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ,ஆகிய படங்களில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து தற்போது மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை அடைந்துள்ளார்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஹரிஷ் கல்யாணின் புதிய படமான “ஸ்டார்” என்கிற படத்தில் போஸ்டர்கள் வெளியானது. “தளபதி” படத்தில் வந்த ரஜினியின் கெட்டப்பை போலவே அந்த போஸ்டரில் அவர் போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது அந்த போஸ்டர் நல்ல வைரலாகப் பட்டு வருகின்றது. இந்த நிலையில் இரண்டாவது போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் “சிகப்பு ரோஜாக்கள்” கமல் கெட்டப்பில் காட்சியளிக்கிறார் ஹரிஷ் கல்யாண்.