தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறி தனது மன்ற நிர்வாகிகளை ஒன்று சேர்த்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ரஜினியின் அரசியல் வருகைக்காக 25 ஆண்டுகளாக காத்திருந்தனர் அவரது ரசிகர்கள்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கட்சி துவங்கப் போவதாக அறிவித்த ரஜினி, தன் மக்கள் மன்றத்துக்கும் பொறுப்பாளர்களை நியமித்தார். அண்மையில் கடந்த 31 ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவிப்பதாகச் சொன்னவர், ஜனவரியில் கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவு ம் சொன்னார். ஆனால் அண்ணாத்தே சூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றவர், தன் உடலில் மாறுபட்ட பிளட் பிரஷரால் அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து திடீரென கட்சி இல்லை என அதிரடியாக அறிவித்தார். இதனால் அவர் அரசியலுக்கு வருவார் எனக் காத்திருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அவருக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த ரசிகர்மன்ற, மக்கள் மன்ற நிர்வாகிகள் விரக்தியின் உச்சத்துக்கே சென்றனர்.
இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே செந்தில் செலவானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர் கணேசன் உள்பட 4 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.