நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக அறிவிக்க வேகத்தில் அந்த எண்ணத்திற்கு முழுக்கு போட்டுவிட்டார். மீண்டும் அவர் கட்சி தொடங்க வேண்டும் என ரசிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் ரஜினி கட்வி தொடங்கப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளிடப்பட்ட அறிவிப்பில், ‘ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிடு அவர்கள் விருப்பப்பட்ட கட்சிகளில் இணையாலாம்’ என அறிவிக்கப்பட்டிருந்தது. ரஜினி அரசியலுக்கு இனி வரப்போவதில்லை என அறிவித்ததால் அந்த விவகாரம் ஓய்ந்துவிட்ட நிலையில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், “காந்திய மக்கள் இயக்கத்தில் இணைந்து செயல்பட எண்ணி ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்னை தொடர்புகொள்கிறார்கள். அவர்களுக்கு அன்புடன் ஒன்றைஒன்றை உணர்த்த விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் ரஜினி ஒரு நாள் அரசியலில் அடியெடுத்து வைப்பார் என்ற எதுர்பார்பிலும், முதல்வர் பதவியில் அமருவார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கை பூச்சு இல்லாத பேச்சு, ஆணவம் இல்லாத அடக்கம், எளிமை என அவருடைய நற்பண்புகளை கண்டு அவரது ரசிகர்களாக மாறியுள்ளீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ரஜினிக்காக எதையும் இழக்க தயாராக இருக்கும் உங்கள் அர்ப்பணிப்பை நேரில் கண்டு நான் நெகிழ்ந்திருக்கிறேன்.
பால் பட்ட அரசியலை பழுது பார்க்க அவர் அரசியலில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச் சூழ்நிலை அவரது கனவை நனவாக்க இடம்தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவது தவிர்த்திருக்கிறார் நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விடவும் இல்லை. இந்த நிலையில் அவருடைய கூற்றின்படி சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரண் அடைந்திருப்பதையும், சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு நான் வருந்துகிறேன். காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாகத் தொடர்ந்து செயல்படும். அவரவர் இடத்தில் இருந்தபடி கரங்கள் இணந்து காரியமாற்றுவோம். நான் ஒரு காந்தியவாதி. இறக்கும் நாள்வரை இடையறாமல் தன்னலமின்றி சமூக நலன் சார்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இழிந்த விமர்சனங்களை இம்மியும் பொருட்படுத்தலாகாது. மாற்று அரசியலை வளர்த்தெடுக்கும் பணியில் நீங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று சான்றாண்மை மிக்க மூத்தோர் பலர் வழங்கிய அறிவுரையை ஏற்கிறேன்.
தரம் தாழ்ந்த, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தியதில்லை. எந்த லாவணிக் கச்சேரியிலும் ஒரு நாளும் நேரத்தை விரயமாக்காமல் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பணிகளில் காந்திய மக்கள் இயக்கம் முன்னிலும் முனைப்பாக ஈடுபடும். மார்ச் 7-ம் நாள் திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திபூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி” என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.