மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் ஒருமாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திசாடி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘நாட்டில் வேலையின்மையால் இளைஞர்களும், பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் மோடி அரசாங்கம்.’ என ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது