’ஏற்றி விடவோ தந்தையும் இல்லை, ஏந்திக் கொள்ள தாய்மடி இல்லை. என்னை நானே சிகரத்தில் வைத்தேன்” என அட்டகாசம் படத்தில் வரும் ‘’உனக்கென்ன உனக்கென்ன’’ பாடல் தல அஜித்தின் திரைத்துறை வாழ்க்கையை பேசும். சாதாரண பைக் மெக்கானிக்காக தன் வாழ்க்கையைத் தொடங்கி, சினிமாவில் எந்த பிண்ணனியும் இல்லாமல் இன்று முக்கிய இடத்துக்கு வந்திருக்கிறார் அஜித்.
அஜித் தனது திரைப்பட விழாக்களுக்கு கூட அதிகம் தலைகாட்ட மாட்டார். இதனாலே அஜித் படங்களுக்கு ஆடியோ ரிலீஸ் பங்சன்களும் நடப்பது இல்லை. அஜித் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதும் இல்லை. இதனால் அஜித்தை பார்ப்பதே மிகவும் அபூர்வமானதாக அவரது ரசிகர்கள் பார்க்கிறார்கள். திரையுலகில் முண்ணனியில் இருக்கும் போதே ரசிகர் மன்றங்களை களைத்தது, தியேட்டர் வாசல்களில் பேனர்கள் வைப்பதற்கு பதிலாக மரக்கன்றுகளை நடுங்கள் என சொன்னது என அஜித் மற்றவர்களை விட எப்போதும் வித்தியாசம் காட்டுவார்.

இந்நிலையில் இப்போது வலிமை படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடந்துவரும் நிலையில் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கருப்பு கலர் டீசர்ட்டில், மொட்டை தலையுடன் லேசாக வளர்ந்த வெள்ளை முடியுடன் இருக்கிறார் தல அஜித். அந்த படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.