யானையைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். யானை ஆடி அடைந்து வருவதே கம்பீரமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே யானையை ஒருனிமிடம் ஆச்சர்யமாக பார்த்துச் செல்வது வழக்கம். தமிழகத்தில் கோயில்களில் இருக்கும் யானைகள் நாள் முழுவதும் அங்கே இருப்பதால் அவைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் வரும் 8ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் இந்த முகாம் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முகாமில் பங்கேற்க உள்ளன. ஒரு வருடமாக கோவில்களில் அவர்களை ஆசீர்வாதம் செய்த யானைகள் புணர்ச்சி பெறும் தருணம் இது.