நம் உடம்பிற்குத் தேவையான அனைத்து சத்துக்களையும், தேவைக்கேற்ப பலன்களையும் தரும் மகத்துவம் கீரைக்கு உண்டு. அந்தவகையில் முடக்கத்தான் கீரை உடலில் பல நோய்களை நீக்கி மருந்தாக செயல்படுகிறது.
பெண்களில் மாதவிடாய் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் முடக்கத்தான் இலையை வதக்கி ஒரு மண்டலம் தொடர்ந்து அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு சரியான நேரத்திற்கு வரும் .மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி போன்ற வலிகளையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது முடக்கத்தான் கீரை.
முடக்கத்தான் கீரையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு குளித்தால் முதுகு வலி, உடல் வலி போன்றவை இருந்தால் வெகுவாகக் குறைய தொடங்கும்.மேலும் முடியும் செழித்து வளரும். முடி கொட்டுவது நின்று வழுக்கை விழுவதும் குறையத் தொடங்கும். நல்ல கருகருவென அடர்த்தியாக வளரும். முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அதனை வாதத்திற்கு மற்றும் வீக்கத்திற்கும் வைத்துக்கட்ட வீக்கம் வடிந்து வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இவ்வளவு பலன் கொண்ட முடக்கத்தான் கீரையை நீங்களும் விட்டில் உபயோகித்து சாப்பிட்டு நல்ல உடல் நிலை பெறுங்கள். மூட்டு வலி முதல் முதுகு வலி வரை அனைத்தையும் போக்கும் தன்மை முடக்கத்தான் கீரைக்கு உண்டு. பொதுவாகவே தினம் ஒருவகை கீரையை உணவில் சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமான விசயம் ஆகும்.