நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான சாமி திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று பிரபல ஹாட்ஸ்டார் இணையதளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மூக்குத்தி அம்மன் ஆக இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடித்து இருந்தார். இவரது நடிப்பு தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய வெற்றி பெற்று தந்தது. ஆனால் முதன் முதலில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன் தாரா நடித்த கதாபாத்திரத்தில் ந நடிகை சுருதிஹாசன் தான் நடிக்க கேட்டோம் என்று இயக்குனர் பாலாஜி சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கதை சொல்லி ஓகே செய்த பிறகு நடிகை நயன்தாராவும் இந்த கதையை சொல்ல அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று ஆர் ஜே பாலாஜி முடிவு செய்ததாக தற்போது இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.