ஓசூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளை ஆறு கொள்ளையர்கள் சேர்ந்து கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 கொள்ளையர்களிடமிருந்தும் ரூ.12 கோடி ரூபாய் மதிப்புமிக்க நகைகள் மட்டுமல்லாது 7 துப்பாக்கிகள், 2 கத்திகள் என பலவற்றை பறிமுதல் செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு வேறு குற்ற சம்பவங்களில் தொடர்பு இருக்கிறதா எனவும் விசாரித்து வருகின்றனர்.