நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு முகக் கவசம் வழங்குவதாக சொல்லி, டெண்டர் முறைகேடு செய்த அதிமுக அரசு, அந்த முகக் கவசங்களைத் தயாரித்தவர்களுக்குரிய பணத்தை கொடுக்காமல் வஞ்சிக்கும் கொடுமையும் தற்போது அம்பலமாகியுள்ளது என கடுமையாக சாடத் தொடங்கியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
முதலிடம் என்பது முறைகேடுகளில்தானா என்ற கேள்வியோடு தொடங்கும் முகநூல் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அதில் தேங்கிக் கிடப்பவை 5 கோடி முகக் கவசங்கள் மட்டுமல்ல; அதனைத் தயாரித்த பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையும்தான்! என தொடர்கிறது. இன்று சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக அரசு தொடர்ந்த 6 அவதூறு வழக்குகளில் ஆஜரானேன். சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல அவதூறு வழக்குகளை ரத்துசெய்து அ.தி.மு.க. அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் இந்த அவதூறு வழக்குகள் அனைத்தும் தொடுக்கப்பட்டுள்ளன.
ஆளும்கட்சியின் தவறுகளையும் ஊழல்களையும் விமர்சிப்பது மட்டும்தான் எதிர்க்கட்சியின் ஒரே முக்கியக் கடமை. அது தான் ஆரோக்கியமான ஜனநாயகம் என்றும் நாங்கள் ஒரு பிரதான எதிர்க்கட்சியாக இருந்தே விமர்சனம் செய்கிறோம். எங்கள் மீது சில அவதூறு வழக்குகளை தொடுத்து தி.மு.க. வின் ஜனநாயக கடமையை தடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது என ஒரு பதிவை போட்டுள்ளார் இந்த பதிவு தற்பொழுது வைரலாகி இருக்கிறது.