என்னதான் தொட்டதுக்கெல்லாம் அலோபதி மருந்துகள் வந்துவிட்டாலும் நம் பாரம்பர்யமான பாட்டி வைத்தியத்துக்கு இருக்கும் மவுசே தனிதான். வாருங்கள் இதில் அவைகளைப்பற்றிப் பார்ப்போம்..
கவுதும்பை இலையை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து அதனுடன் அதே அளவு வெண்ணையை ஊற்றி குழப்பி காலையில் மட்டும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலக்கடுப்பு குணமாகும்

சருமத்தில் இருக்கும் பருக்கள் நீங்க ஒரு சிறந்த வழி ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் க்ரீன் டீத்தூள். இரண்டையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து அதை சருமத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும் பின்பு 10 நிமிடங்கள் அப்படியே அதை காய வைத்து இருக்கவேண்டும் பின் சருமத்தை நீரில் கழுவ வேண்டும். சிலருக்கு சருமம் எப்போதும் வரண்டு இருப்பதுபோல் இருக்கும். இவர்கள் கடலை மாவுடன் கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து முகத்தில் தடவி வந்தால் அழகு அதிகரிக்கும் அதுபோக சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.
ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவவேண்டும். இந்த கடலை மாவு அழகு குறிப்பு முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர சருமம் பொலிவுடன் காணப்படும்.