செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் இவருடைய வயது 33 இவர் மீனவராக உள்ளார். இவருக்கு சீலா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளன.ர் இவர் நேற்று தனது சிறிய படகில் தன்னந்தனியாக மாமல்லபுரம் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது கடல் சீற்றமாக காணப்பட்ட நிலையில் படகு கடலில் தத்தளித்த கடலில் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காற்று பலமாக வீசியதால் மீன்பிடி வலை அவரது காலில் சுற்றிக் கொண்டு படகிலும் சிக்கிக் கொண்டுள்ளது. அப்போது நிலை தடுமாறி கடலில் படகு கவிழ்ந்து உள்ளது.
இதில் கடலில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்துள்ளார் சற்று நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது.அவரது உடல் ஒதுங்கிய சிறிது நேரத்தில் அவர் சென்ற படகும் கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல்கள் சென்றுள்ளது தகவல். அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மாபல்லபுரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.