கடந்த 2013 ஆம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை திரைப்படங்கள் உடைய இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம்தான் சூது கவ்வும். இந்த திரைப்படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதிக்கு எக்கச்சக்கமான ரசிகர்களும் எக்கச்சக்கமான படவாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் தான் இன்று நேற்று நாளை இந்த திரைப்படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த இரண்டு படங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.இந்தப் படத்தினுடைய தயாரிப்பாளரான சி.வி.குமார் தற்போது இந்த இரண்டு படத்தினுடைய இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாகவும் இரண்டு படங்கள் உடைய கதையை படித்து உள்ளதாகவும் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த செய்தி ரசிகர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.