பலநூறு பில்லியன் வருடங்களுக்கு மேலாக பூமியில் புதையுண்ட படிமங்கள் தான் கச்சா எண்ணெய் ஆக உருமாறுகிறது. அந்தப் கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பொருட்களில் அடங்குவது தான் பெட்ரோல் மற்றும் டீசல். இன்றைய நாளில் வாகனங்களின் உபயோகமானது பெரிதும்அதிகமாகி விட்டது மேலும் பெட்ரோலிய வளமும் குறைந்தது போய் விட்டது என அறிஞர்கள் கூறுகின்றனர்.

தற்பொழுது பெட்ரோல் விலையும் அடிக்கடி அதிகரித்து வருகிறது. சமீபத்தில் அதிகரித்து இருக்கும் பெட்ரோல் விலை விவரத்தைக் காண்போம். சென்னையில் பெட்ரோல் விலை விட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.88.29 க்கு விற்பனை; டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.81.14 க்கு விற்பனை.
பெட்ரோல் டீசல் விலை அதிகரித்திருப்பதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.