இளையதளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. விஜய், விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான இந்தப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். கடந்த மார்ச் மாதமே மாஸ்டர் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீஸிற்கு தயாராகி இருந்தது. ஆனால் கொரோனாவால் லாக்டவுண் வந்துவிட மாஸ்டர் 8 மாதங்களாக ரிலீசிற்கு காத்திருந்தது.
மாஸ்டர் படத்தை ஓடிடி யில் ரிலீஸ் செய்யும் வாய்ப்பு இருப்பதாக இடையில் பேச்சுவர தளபதி ரசிகர்கள் ரொம்பவே சோர்ந்து போயினர். ஆனால் அந்த கணிப்பையெல்லாம் தவிடு பொடியாக்கி மாஸ்டர் பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸானது. கொரோனா லாக் டவுணுக்குப் பின்பு ரிலீஸாகும் படம் என்பதால் ரொம்பவே எதிர்பார்ப்போடு இருந்தது இந்தப்படம். கொரோனாவுக்குப் பின் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வரவில்லை. அதற்கான வாசலைத் திறந்துவிட்டதும் மாஸ்டர் தான்.
சென்னையில் நாளொன்றிற்கு மாஸ்டர் திரைப்படம் ஒரு கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது. சரி மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை பற்றி விவரமாக பார்க்கலாம்..
தமிழ்நாடு- ரூ 81 கோடி, ஆந்திரா தெலுங்கானா – ரூ 20 கோடி, கர்நாடகா – ரூ 14 கோடி, கேரளா – ரூ 7.5 கோடி
ROI – ரூ 2.5 கோடி என வசூலைக் குவித்துள்ளது மாஸ்டர் திரைப்படம்.