லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய குருநாதராக கருதும் கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரலாக வந்தது. ஹாலிவுட் பட காப்பி என பல சர்ச்சைகள் வந்தாலும் பல மில்லியன் பார்வையாளர்களை விக்ரம் படத்தின் டீசர் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் இசையமைப்பாளர் அனிருத் இசை வேற லெவலில் இருந்தது. லோகேஷ் கனகராஜ் கமலஹாசன் படத்தின் வேலைகளில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றார். மாஸ்டர் பட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியை கொடுத்துள்ளார்.அதில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் வில்லனாக நடிக்கப் போவது யார் என்பதைப் பற்றியும் கூறியுள்ளார் .இந்த தகவல் தான் தற்போது இணையதளங்களில் வைரலாக பட்டு வருகின்றது .அவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்து நடித்துக்கொண்டிருக்கும் பிரபல நடிகர் விஜய் சேதுபதிதான்.
தொகுப்பாளர் விக்ரம் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை போடலாமே?என்று கேட்டதற்கு நாம் அதைப்பற்றி அப்புறம் பேசிக்கலாம் என இருவரும் மறுத்து விட்டனர். இதிலிருந்து கிட்டத்தட்ட விஜய் சேதுபதிதான் விக்ரம் படத்தின் வில்லன் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. முன்னதாக விக்ரம் பட வில்லன் கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்என்பவர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. விரைவில் விக்ரம் படத்தின் வில்லன் யார் என்பதை பற்றி அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.