காமராஜர் மற்றும் எம்ஜிஆர் இவர்களின் ஆட்சி காலத்தில் தான் அனைவரும் கல்வி கற்க ஆரம்பித்தனர் அதற்கு காரணம் அவர்கள் அந்த காலங்களில்
பள்ளியில் கற்க வரும் மாணவர்களுக்கு வழங்கிய சலுகைகள் தான். தற்பொழுதும் அரசு சார்பில் பள்ளி செல்லும் மாணவர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம்தான் இலவசப் பேருந்துப் பயணம்.

கொரோனா பொதுமுடக்கம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறந்துள்ளன. இந்த நிலையில் பள்ளி மாணவர்களாக அரசு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது
பழைய பஸ் பாஸ் பயன்படுத்தி அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுளது. தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால் 18 லட்சம் மாணவர்கள் 10 மாதங்களுக்குப் பிறகு மாணவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்ல உள்ளனர். எனவே அவர்களுக்கு இது பயன்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.