தமிழ்நாட்டில் அதிக வசூலைக் குவிக்கும் ஒரு வியாபாரம்தான் டாஸ்மாக். டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஊரிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களுக்கு ரசீது வழங்க புதிதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மதுபானங்களை, அதிக விலைக்கு விற்கும் விற்பனை பிரதிநிதிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவே இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய அறிவிப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மது பிரியர்களே ரசீதுகளை சேமித்து வைத்து எவ்வளவு ரூபாய்க்கு நீங்கள் மது அருந்தி இருக்கிறீர்கள் என கணக்கிட்டு பாருங்கள் வாழ்க்கையை வென்று விடலாம்.