தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கான விழாவாக கடந்த சில நாட்கள் நகர்ந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் நேற்றுமுன்தினம் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டது. நேற்று சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் மதுரை திருமங்கலம் டி.குன்னத்துாரில் அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் அம்மா பேரவை சார்பில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், அம்மா கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் நடந்த கோ பூஜையில் பங்கேற்த முதல்வர் அங்கிருந்த மூத்த கட்சி நிர்வாகிகள் 120 பேருக்கு பசுக்களை தானமாக வழங்கினார். மேலும் நலிவடைந்த 234 கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளையும் வழங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர். தமிழகத்தில் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடங்கள், ஜெயலலிதா கோயில் என விழா களைகட்டுவதால் அ.தி.மு.க-வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.