நீலகிரி மாவட்டத்தில் மசினகுடியில் படுகாயங்களுடன் உயிரிழந்த காட்டு யானைக்கு தீ வைத்ததாக இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். ஒருவரை தேடி வருகிறார்கள்.
விசாரணையில் மசினகுடி தர்கா ரோட்டை சேர்ந்த பிரசாத் அவருடைய வயது (36), மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரேமண்ட் டீன் அவருடைய வயது (28) , ரிக்கி ராயன் அவருடைய வயது (31) ஆகிய 3 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது.
சம்பவம் என்ன?
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதியில் 40 வயது மதிப்பிலான யானை முதுகில் காயத்தோடு சுற்றி வந்தது. வனத்துறையினர் மயக்க மருந்து கொடுத்து சிகிட்சையளித்தனர். அதன்பின்னர் குணமான யானை மசினகுடி பகுதியில் சுற்றிவந்தது. அதை கும்கி யானை கொண்ட் வனத்துறையினர் பிடித்தனர். இந்நிலையில் அதை காப்பகம் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துபோனது.
