இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர் தான் சச்சின் டெண்டுல்கர். தற்போது அவரது குடும்பத்துடன் உற்சாகமாக அவருடைய நேரங்களைச் செலவு செய்து வருகிறார் .அதுமட்டுமில்லாமல் அந்த ஜாலிமூடில் அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றார்.
அந்தவகையில் சச்சின் வெளியிடும் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் அதிகம் விரும்பி லைக்ஸ் களை குவித்து வருகின்றனர். அதன்படி அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது. டெண்டுல்கர் தனது மகள் சாராவுடன் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அதில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரும் அவரது மகள் சாராவும் ஸ்டைலாக சன் கிளாஸ் மற்றும் லைப் ஜாக்கெட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளனர் மேலும் அந்த பதிவின் புகைப்படத்தோடு அவருடையது கடி ஜோக் ஒன்றையும் இணைத்து பதிவு செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.