கார்களில் பல வெரைட்டிகள் உண்டு. கார் பிரியர்கள் தனக்கென தனித்துவமான வெரைட்டிகளையே பெரிதும் விரும்புவார்கள். அதில் ஒரு வெரைட்டி தான் இந்த போர்ஷே பாக்ஸ்டர்.கடந்த 25 வருடங்களாக இந்த கார் விற்பனை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.தற்போது அதன் 25வது வருட நிறைவு விழாவைக் கொண்டாடும் விதமாக புதிதாக வரும் மாடலை அப்டேட் செய்ய இருக்கிறது இந்நிறுவனம்.
போர்ஷே நிறுவனம் அதன் மாடல்களில் ஒனறான ரோட்ஸ்டர் மாடலின் விற்பனையை தொடங்கி வெற்றிகரமாக 25 வருடம் நிறைவடைந்து விட்டதால் இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் ஒரு புதுமையைச் செய்துள்ளது. அதாவது விற்பனைக்கு கொண்டுவரப்படும் பாக்ஸ்டர் 25வது ஆண்டு நிறைவு எடிசன் போர்ஷேவில், 718 பாக்ஸ்டர் ஜிடிஎஸ் 4.0 மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வருகிறதாம். இந்த ஸ்பெஷல் பாக்ஸ்டர் எடிசனில் கூடுதலாக 4.0 லிட்டர் 6-சிலிண்டர், பாக்ஸர் என்ஜின் வழங்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.