உலகெங்கிலும் மதபோதகர்கள் பலபேர் இருக்கின்றனர். அவற்றில் குறிப்பாக கிறிஸ்தவ மதபோதகர்கள் கிறிஸ்தவ நாடெங்கும் பரவி இருக்கின்றனர். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பால் தினகரன் என்பவர் மிகவும் பிரபலம். தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியை தலைமையிடமாகக் கொண்டு ‘ஏசு அழைக்கிறார்’ என்று பால் தினகரன் நடத்தி வரும் கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்கள் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.
இந்நிலையில் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையாறு, காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 28 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனை மூலம் ஏதாவது தகவல் கிடைக்குமா என வருமான வரினர் கூறி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.