ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் தான் பெற்ற குழந்தையை தாயே கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் சித்ரா (20) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனினும் கள்ளத்தொடர்பு மூலம் பிறந்த இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சித்ரா கருமாங்கழனி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை குழந்தைகளின் பாதுகாப்பிற்காக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டுமாதங்களுக்கு முன்பு சித்ராவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதா சொல்லி தன் மகனுக்கு 60 சதவீத தீக்காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இதுதொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே முட்புதரில் ஒரு சிறுவன் தூங்கிக்கொண்டிருந்தார் இதை பார்த்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தனர். அதில் தன் தாய் பெயர் சித்ரா எனவும், ஆனால் அவருடன் செல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் உறவினர்களிடம் அந்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒருதாய் தனது குழந்தையை கழுத்தை நெறிக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் சித்ரா தன்னுடைய குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அது திருமணத்திற்கு முன்பு சித்ராவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் அதன் மூலம் இரண்டு பிள்ளைகள் பெற்றெடுத்த விபரமும் தெரியவந்தது .இதனை அடுத்து அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஊர் மக்களுக்கு பயந்து கருமாங்கழனி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தனிலையில் கட்சிபட்டு பகுதியை சேர்ந்த இன்னொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.அந்த வாலிபருடன் தனிமையில் இருப்பதற்கு தனது இரண்டு பிள்ளைகளும் இடையூறாக இருப்பதால் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தனது கள்ளகணவருடன் சேர்ந்து தனது மூத்த மகன் கார்த்திகை கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார் .அதை தனது செல்போனில் வீடியோ எடுத்து அவருடைய நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோ வைரலாக தற்போது பரவி வருகின்றது. தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து சித்ராவின் இரண்டாவது மகன் தீக்காயமடைந்து இறந்தாரா அல்லது சித்ராதான் கொலை செய்தாரா என்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக் காதலரை வலைவீசி தேடி வருகின்றனர்.