சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூபாய் 87.40 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூபாய் 80.19 என்கிற விலையில் விற்கப்பட்டு வருகின்றது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று மாற்றம் இல்லை என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தினசரி மாறுபாடு அடைந்துவந்த நிலையில் இன்று விலை கூடாதது குறிப்பிடத்தக்கது.