தற்போது நம் நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு நோய்தான் புற்றுநோய். இந்த நோய்க்கு காரணம் நமது உணவுப்பழக்கம். கூடவே வாழ்வியல் மற்றும் சுற்றுச் சூழலியல் மாற்றம் என பல்வேறு காரணங்களை கூறலாம். இருப்பினும் இந்த சாதாரண சூழலில் நம்மை புற்றுநோயில் இருந்து பாதுகாக்க இயற்கை நமக்கு உதவுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
நாம் எவ்வளவு இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் இயற்கை நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவித்து கொண்டிருக்கிறது. ஆம் புற்றுநோய் வராமல் இருக்க நாம் சாப்பிட வேண்டிய ஒரு கேரட் இயற்கை நமக்காக வழங்கியிருக்கும் கொடைதான்
நீண்ட காலமாக ஆரஞ்சு வண்ண கேரட்டைத் தான் மக்களுக்குத் தொியும். தற்போது கருப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த கேரட் மக்களுக்கு ஒரு புதிராகத் தான் தொிகிறது
கருப்பு கேரட் அல்லது காலி கஜாா் என்று அழக்கப்படும் ஒரு வகையான காய் இந்தியா, துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.இந்த கருப்பு கேரட் ஆரஞ்சு வண்ண கேரட் வருவதற்கு முன்பாகவே அதாவது கிபி 16 ஆம் நூற்றாண்டின் போதிருந்தே இது உள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தரக கேரட்டை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.