விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் கலக்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இன்னும் இரண்டு நாளோடு நிறைவடைய போகும் இந்த நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஆம் இன்னும் 2 நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கிராண்ட் ஃபினாலே வுடன் நிறைவடைய போகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 லட்ச ரூபாய் பெட்டியுடன் கேபிரியல்லா வெளியேறியுள்ளார். இந்நிலையில், நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டி வைக்கப்பட்டது. 6 போட்டியாளர்களில் யார் அந்த பெட்டியை தூக்கிக் கொண்டு செல்லப் போகிறார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், கேபி அதை கைப்பற்றினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் என்ன என்பதை காண இந்த வார இறுதிவரை காத்திருக்க வேண்டும்