உலகம் முழுவதும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு பக்கம் கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், மேலை நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கட்ட வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது குறைந்துவரும் நிலையில், நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல் படுத்தி வருகிறது. அடுத்தவாரம் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கொரோனா பரவும் அச்சுறுத்தல் இருப்பதால் இதனை தவிர்க்க பல மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது, ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரங்களில் வருகிற டிசம்பர் 31ஆம் தேதி இரவு முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.