புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீீடு வழங்குவது தொடர்பாக புதுவை அமைச்சரவை முடிவுசெய்து துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பியது. துணைநிலை ஆளுநர், அமைச்சரவையின் முடிவில் உடன்படாததால் கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பான வழக்கில், 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
