புதுச்சேரியில் வருகின்ற 18ஆம் தேதி காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடைபெற இருக்கின்றது.வேளாண் சட்டத்திற்கு எதிராகவும், மாநில அந்தஸ்து கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக புதுவை முதல்வர் நாராயணசாமிக்கும், அங்கு துணை நிலை ஆளுநராக இருக்கும் கிரண்பேடிக்கும் இடையே கடுமையான பனிப்போர் நடந்துவருகிறது. இருவரும் பரஸ்பரம் மாற்றி, மாற்றி குற்றச்சாட்டுக்களைச் சொல்லி வருகின்றனர். கடந்த புத்தாண்டில் கடற்கரையில் கொண்டாட்டத்துக்கு நாராயணசாமி அன்மதி அளித்த நிலையில் கிரண் பேடி, இதனால் கரோனா தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்த்தார். இப்படி ஆளுநர், முதல்வர் இடையே தொடர்ந்து கருத்தியல் மோதல் நடந்துவரும் நிலையில் சட்டப்பே ரவை கூடுவது குறிப்பிடத்தக்கது.