பழையன கழிதலும் புதியன புகுதலும் என நம் தமிழ் மரபில் பொங்கலுக்கு முந்தைய நாளில் போகிப் பண்டிகை கொண்டாடுவோம். அதேபோல் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் பழைய கார்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என ஒரு திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கையின்படி, 15 ஆண்டுகள் கடந்த வர்த்தக வாகனங்கள் மற்றும் 20 ஆண்டுகள் கடந்த கார் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் மாசு உமிழ்வு தரம் உள்ளிட்டவற்றை பரிசோதிப்பதற்கான தகுதிச் சோதனை வாகனங்களுக்கு கட்டாயமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.