ஒரு காலத்தில் ஆதிமனிதன் என்பவன் காய் மற்றும் கனிகளை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தான். அப்பொழுது அவனை அறியாமலேயே பல ஊட்டச்சத்துகளும் அவன் உடம்பினுள் சென்றது. அதேபோல தான் இப்போது இருக்கும் காய்கறிகளை நாம் உண்டாலும் நமக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக பீட்ரூட்டை எடுத்து கொள்ளலாம்.
பீட்ருடில் அதிகளவு தண்ணீர் உள்ளது. மற்றும் இது குறைந்த உள்ளடக்கம் கொண்டது.. இந்த இரண்டு பண்புகளும் எடை இழப்புக்கு நன்மை பயக்கும். ஒர்க்அவுட் அமர்வுக்குப் பிறகு இந்த வேர் காய்கறியை சாப்பிடுவது விரைவான தசை மீட்புக்கு உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தொடர்ந்து பீட்ரூட்டை சாப்பிட்டால் ரத்தம் நன்கு ஊறும். ஹீமோகுளோபினும் நல்ல நிலையில் ஏற்றம் பெறும். அப்புறம் என்ன இனி உங்க சாப்பாட்டில் பீட்ரூட் சேர்க்க மறந்துடாதீங்க…