கரோனா வைரஸி தாக்கம் உலகம் முழுவதுமே கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கரோனா பரவல் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்காணோர் ஊதிய வெட்டு, சம்பள இழப்புக்கு ஆளாகியுள்ளனர். இப்படியான சூழலில் பிரிட்டனில் புதுவகை உருவம் பெற்று கரோனா வைரஸின் இரண்டாம் அலை துவங்கிவிட்டது.
இதனையொட்டி இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கான விமானசேவைகள் அனைத்தும் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிவரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. அரசு பயந்ததைப் போலவே, ஏற்கனவே பிரிட்டனில் இருந்து திரும்பிய சிலருக்கு புதுவகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் கூறுகையில், ‘இந்தியா_பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது. இதுதொடர்பாக இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்புவரும். பாதுகாப்பு நடைமுறையோடு மீண்டும் விமான சேவை தொடங்கமுடியுமா எனவும் ஆலோசித்து வருகிறோம்.’’என்றார் அவர்.