பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அறிவித்திருக்கிறது. இதேநேரத்தில் பிரிட்டனில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தானது மக்களுக்கு ஒருபுறம் செலுத்தப்பட்டும் வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம்தொட்டுள்ளது.

பிரிட்டனில் வேலைவாய்ப்பின்மை 4 சதவிகிதம் உயர்வை அடைந்துள்ளது. கரோனாவால் நிகழ்ந்த மாற்றத்தால் பிரிட்டனில் சுமார் 2,41,000 பேருக்கும் மேல் வேலைவாய்ப்பு தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்ற தகவலானது பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை பிரிட்டனில் 17 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டு செய்தித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.