தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதல்வருடன், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகளும் டெல்லி சென்றுள்ளனர். இந்த பயணத்தின்போது காவிரி – குண்டாறு இணைப்புத்திட்டம் குறித்தும், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்தும் பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடியை அழைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி மட்டுமல்லாது உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோரையும் முதல்வர் சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய கஜா புயல், நிவர் புயல் நிவாரண நிதிகளை விடுவிப்பது குறித்தும் முதல்வர் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.