விடியலை நோக்கி என்னும் பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்சியின் மூத்த நிர்வாகிகளே அவர் பின்னால் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் பெரும்படையை திரட்டிக் கொண்டு ஒவ்வொரு ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறார். கூடவே உதயநிதிக்காக பிரத்யேகமாக பிரச்சார வாகனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமானூர் என்னும் கிராமத்தில் பரப்புரைக்குப் போனார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அங்குள்ள ஜி.கே.மூப்பனார் அரங்கத்தில் வைத்தே கூட்டம் நடந்தது. இருந்தும் அந்த மேடையில் ஜி.கே.மூப்பனார் அரங்கம் என்னும் பெயரை மறைத்து பதாகை வைத்திருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த த.மா.க தொண்டர்கள் சிலர் உதயநிதி திரும்பிச் செல்லும் போது வழியில் நின்று அவரது வாகனத்தை த.மா.க கொடியுடன் வழிமறித்தனர்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத உதயநிதி ஸ்டாலின் பெரும் பதட்டம் அடைந்தார். சிறிது நேரத்திலேயே உதயநிதியின் வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்றது.