தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை திறந்துவைக்க பிரதனர் நரேந்திர மோடி வரும் 14-ம் தேதி வருகைதர உள்ளதாக தகவல் வெளியாகியுளது. கடந்த மாதம் 18-ம் தேதி டில்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமரை சந்தித்து திட்டங்களை தொடங்கிவைக்க அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பணி முடிந்த சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்டம், துாத்துக்குடி எரிவாயு குழாய் திட்டம் போன்றவற்றை தொடங்கி வைக்கவும். கல்லணை புனரமைப்பு திட்டம், பவானி ஆறு நவீனப்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட பாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.