பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் நடிகர் ரியோ. அதில் அவர் கூறியிருப்பது, எல்லோருக்கும் முதலில் வணக்கம்! நான் இப்போது ரொம்ப நலமாக இருக்கிறேன். பிக்பாஸ் சீசன் 4 எனக்கு ஒரு அழகான நல்ல பயணமாக இருந்தது. அதை நான் வெளியில் வந்த பிறகுதான் தெரிந்துகொண்டேன். நீங்கள் கொடுத்த ஆதரவு மற்றும் அன்பை வெளியில் வந்து பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் நல்ல ஓப்பனிங்காக இருக்கிறது. வெற்றிகரமாக நான்கு சீசன்களை முடித்திருக்கும் பிக்பாஸ் பலருக்கும் நல்ல மாஸான வரவேற்பைக் கொடுத்துள்ளது. இதன் மூலம் ஓவியா, ஆரவ், ஹரீஷ், ரைசா என பலருக்கும் படவாய்ப்புகள் குவிந்தது. அதேநேரம் பிக்பாஸ் வீட்டில் விளையாடியதால் ஜூலி போல் தன் இமேஜை இழந்தவர்களும் உண்டு. எது எப்படியோ பிக்பாஸ் இல்லம் ரியோவுக்கு எப்படியான வாழ்வைக் கொடுக்கப் போகிறதோ?