திருவள்ளூர் அருகே பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இளைஞரை இளம் பெண் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் வசித்து வந்தவர் அஜித்குமார் இவருடைய வயது 25. இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கௌதமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிய வருகின்றது. இந்த நிலையில் நேற்று அஜித்குமார் கௌதமியிடம் கத்தியை காட்டி மிரட்டி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஆத்திரமடைந்த கௌதமி அஜீத் குமார் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை அங்கேயே குத்திக்கொலை செய்திருக்கிறார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் தானாகவே முன்வந்து சரணடைந்தார் கெளதமி.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமாரின் சடலத்தை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை இளம் பெண் குத்திக்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.