சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சித்ரா.சித்ரா தற்கொலை விவகாரத்தில் அவருடைய கணவர் ஹேமநாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் போலீசாரிடம் சிக்கியது எப்படி ?என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் டிவில் ஒளிபரப்பாகிவரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்கிற தொடர் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை சித்ரா. இந்த சீரியலில் இவர் நடித்த முல்லை பாத்திரமும் நல்ல ரீச் ஆனது சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணச் செய்தி திரை உலகில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நாட்டிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரின் தற்கொலைக்கு சித்ராவின் பெற்றோர் மற்றும் கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது இதனால் இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக போலீசார் கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர்.அவர்கள் சொன்ன அனைத்தையும் போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் தன் மகள் சாவுக்கு அவளது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்பதை சித்ராவின் அம்மா 6 நாட்களுக்கு முன்பு கூறினார். நேற்று ஆர்டிஓ விசாரணை முடிந்தும் அதையே கூறினார்.இருப்பினும் இந்த விஷயத்தில் போலீசார் அவசரப்படாமல் ஆறு நாட்களுக்குப் பிறகு தான் முடிவுக்கு வந்தனர்
இப்போதைக்கு 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப் பட்டு சிறையில் இருக்கிறார் ஹேமநாத். நேற்று சித்ராவின் பெற்றோரிடம் ஆர்டிஓ விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று ஹேமநாத்தின் பெற்றோரிடம் விசாரணை நடந்துள்ளது. இதனுடைய ஹேமநாத் போலீசார் விசாரணை செய்தபோது என்ன கேட்டனர் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது. அதில் நீங்கள் ஏன் சித்ரா தங்கியிருந்த அறையை விட்டு வெளியே சென்று உள்ளீர்கள் என்று கேட்க அதற்கு சித்ரா குளிக்க செல்வதாக கூறியதால் அங்கிருந்து வெளியே சென்றதாக முதலில் கூறினார் ,அதன் பின்பு காரில் உள்ள ஹேண்ட் பேக்கை எடுப்பதற்காகவே வெளியே சென்றதாக கூறினார்.
தொடர்ந்து அவரே காரில் சில பொருட்களை சித்ரா எடுத்து வரச் சொன்னதால் அதற்காகதான் வெளியே சென்றதாக கூறினார். இப்படி முன்னுக்குப் பின் முரணாக கூறியதன் காரணமாக ஹேமநாத் மீதான சந்தேகம் போலீசாருக்கு அதிகரிக்க தொடங்கியது. இதற்கு நடுவில் சித்ராவின் அம்மாவும் என் பெண்ணை கொன்று விட்டான் என்று அவர் மீது குற்றச்சாட்டு வைத்ததால் சந்தேகம் உறுதியாகியது. இதற்குப் பிறகுதான் துணை கமிஷனர் தீபா சத்யன் நேரடியாகவே வந்து ஹேம்நாத் அவரிடம் விசாரணை நடத்தினார். சூட்டிங்கில் முடிந்து காரில் வரும்போது நெருக்கமான காட்சிகளில் நடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஓட்டல் அறைக்குச் சென்றபிறகும் அந்த தகராறு அதிகரிக்க தொடங்கியுள்ளது அப்போது இனி இந்த மாதிரி நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் ஹேம்நாத். சித்ரா அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின்னர் அந்த அறையை விட்டு விட்டு வெளியே சென்றுள்ளார் நான் உங்களை நம்பி இருப்பேன் என்று சித்ரா சொன்னதற்கு அவரை திட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். ஒரு புறம் ஹேமநாத்தின் நடவடிக்கை மற்றொரு புறம் தன் அம்மாவுடன் சித்ராவுக்கு மனக்கசப்பு இருந்து வந்ததால் அளவுக்கு அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகப்பட்ட சித்ரா இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்துள்ளார் அதுமட்டுமின்றி திருவான்மியூரில் வீடு கட்டவும், புதிதாக கார் ஒன்றை வாங்குவதற்கும் சித்ரா கடன் வாங்கி இருப்பதாக தெரிய வருகிறது. இதற்கு பிறகு ஊரடங்கில் சிக்கிக்கொண்டு மறுபடியும் சூட்டிங் தொடங்கியதும் ஓய்வின்றி உழைத்து வந்துள்ளார். மேலும் தனது திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்றும் சினிமா பிரபலங்களை அழைக்க வேண்டும் என்றும் சித்ரா திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் அதற்கும் எந்த விதமான உதவியையும் ஹேமநாத் செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.