சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சோ்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்றார். அதில் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி அபாரமாக விளையாடி சாதித்தார். கடந்த வாரம் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு திரும்பிய நடராஜனுக்கு இளைஞர்களும், ஊா் பொதுமக்களும் நடராஜனுக்குப் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளித்தனா். குதிரை சாரட் வண்டியில் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி நடராஜனை பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு மகள் பிறந்த சமயத்தில் அவர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.
குழந்தையை ஏந்துவதை விட கோப்பையை ஏந்தியது மகிழ்ச்சியான தருணம் என வெளிப்படுத்தினார் நடராஜன். இந்த நிலையில் பழனி முருகன் கோயிலுக்குச் சென்ற நடராஜன், அங்கு முடி காணிக்கை செலுத்தினார். பழனி கோயிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய நடராஜனின் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.