ஆசிரியர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவர்களுக்கும் வரிசையாக தொற்றி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்பொழுது கல்விக்கூடங்களைச் சார்ந்தோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே சேலத்தில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே உள்ள அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னகாந்திபுரம் என்ற இடத்தில் இருக்கும் அரசுபள்ளியின் 10ம் வகுப்பு ஆசிரியை இருந்தார். அந்த .ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்கள் மற்றும் 20 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையை தொடர்ந்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த சம்பவம் போலவே தமிழகத்தில் ஒரு சில பள்ளிகளும் தொற்றானது கண்டறியப்பட்டதால் பள்ளிக்கு சென்று வரும் மாணவர்களும் ஆசிரியர்களும் மனதளவில் கொஞ்சம் அச்சத்துடனேயே இருக்கின்றனர். இருப்பினும் அனைவரும் மாஸ்க் மற்றும் சானிடைசர்களை உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்குமென சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களை பெற்றோர் முழு சம்மதத்துடன் மட்டுமே பள்ளிக்கு அனுப்பவேண்டும் எனவும், லேசான காய்ச்சல், சளி, இருமல் இருந்தாலே பள்ளிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசுக்கு கொரோனா தொற்று பெரும் சவாலாக மாறிவருகிறது.